திருமலை : தெலுங்கு திரை உலகில் சர்ச்சைக்குரிய இயக்குனர் ராம்கோபால் வர்மா இயக்கத்தில் முதல்வர் ஜெகன் மோகன் வாழ்க்கையை மையமாக கொண்ட வியூகம் பட டீசர் நேற்று வெளியானது. தெலுங்கு திரை உலகில் சர்ச்சைக்குண்டான படங்களை இயக்குபவர் இயக்குனர் ராம் கோபால் வர்மா. இவர் தற்போது ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் வாழ்க்கையை மையமாக வைத்து வியூகம் படத்தை தயாரித்து வருகிறார்.
முன்னாள் முதல்வரும் ஜெகன் மோகனின் தந்தையுமான ராஜசேகர் முதல்வராக இருந்தபோது அரசு நிகழ்ச்சியில் பங்கேற்க ஹெலிகாப்டரில் சென்று விபத்துக்குள்ளானது முதல் தொடங்கி ஜெகன்மோகன் அரசியல் நுழைவு பாத யாத்திரை ஆட்சியை கைப்பற்றி முதல்வர் பதவி ஏற்றது என்பதை வரலாற்று மையமாக கொண்டு இயக்குநர் ராம்கோபால் வர்மா இயக்கி வருகிறார். இந்நிலையில் வியூகம் படத்தின் டீசர் நேற்று வெளியாகியுள்ளது. ஜெகன் மோகன் வேடத்தில் அஜ்மலும் அவரது மனைவி பாரதியாக மானசா ராதாகிருஷ்ணனும் நடித்துள்ளனர். ஆந்திர தேர்தலுக்கு இன்னும் 9 மாதங்களே உள்ள நிலையில் வியூகம் திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.
The post ராம்கோபால் வர்மா இயக்கத்தில் ஆந்திர முதல்வர் ஜெகனின் ‘வியூகம்’ பட டீசர் வெளியீடு appeared first on Dinakaran.